ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம் - துறை காணிகள் சீனாவுக்கு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணிகள் அடுத்த மாதம் சீன நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதனூடாக கிடைக்கும் வருமானத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமையை படிப்படியாக செலுத்தி முடிப்பதற்கு எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், துறைமுக அபிவிருத்தி பணிகளின் அடிப்படையில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சில காணிகளை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஹம்பாந்தோட்டை - சீன நட்புறவு காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி சொய்சா, சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments :

Powered by Blogger.