சென்னையில் வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வெளியேற்றம்

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடியாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். 

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந் திகதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே அதிக அளவு மழை வீழ்ச்சி கிடைத்து வருகிறது. 

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 

கடந்த 8 தினங்களில் சென்னையில் மட்டும் வழக்கமாக இந்த மழை பருவகாலத்தில் பெய்யும் மொத்த மழையில் 74 சதவீதம் பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

நேற்று முன்தினம் இரவு சுமார் 6 மணி நேரம் பெய்த இடைவிடாத மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. 

புறநகர் பகுதிகளில்தான் அதிக அளவு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

பல குடியிருப்புகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரமாகும் பட்சத்தில் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் கலந்த பீதி மக்கள் மனதில் உருவாகியுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு போன்றே இந்த ஆண்டும் சென்னை, புறநகர் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மழைத் தண்ணீர் புகுந்துள்ளது.

No comments :

Powered by Blogger.